கள்ளத் துப்பாக்கி பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10,000 பரிசு: கேரள போலீஸ் அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கள்ளத் துப்பாக்கிகளைக் களையெடுக்க போலீஸார் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.
கள்ளத் துப்பாக்கி பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு அளிக்கப்படும் என கேரள காவல்துறை அறிவித்துள்ளது.
மலப்புரம் அருகே 4-வது மனைவி தொடர்ந்த ஜீவனாம்சம் வழக்கில் தன்னை கைது செய்ய வந்த எஸ்.ஐ. விஜய கிருஷ்ணனை முஜிப் என்பவர் சுட்டுக் கொன்றார். விசாரணையில் முஜிப் விலங்குகளை வேட்டையாடுவதற்காக கள்ளத் துப்பாக்கி வைத்திருந்ததும், அதை பயன்படுத்தி எஸ்.ஐ.யை சுட்டுக் கொன்றதும் தெரிய வந்தது.
இந்நிலையில் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் ஏராளமானோர் கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கள்ளத் துப்பாக்கிகளை கண்டுபிடிக்க திருச்சூர் ஐ.ஜி. முகமது யாசிம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளத் துப்பாக்கிகள் குறித்து எஸ்.எம்.எஸ்.க்கள் மூலம் பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம் என்றும், தகவல் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications