பிளஸ்டூ மாணவியுடன் ஆசிரியர் ஓட்டம்-பள்ளியைப் பூட்டி மக்ள் போராட்டம்
வந்தவாசி: பிளஸ்டூ படித்து வந்த மாணவியுடன், அவரது அறிவியல் ஆசிரியர் ஓடிப் போனார். பின்னர் ஜோடியாக காவல் நிலையத்தில் இருவரும் தஞ்சமடைந்தனர். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் பள்ளிக்கூடத்தைப் பூட்டி போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா நல்லூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தெய்யார் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (28) என்பவர் 10-ம் வகுப்பு அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இதே பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த கொண்டயான்குப்பத்தைச் சேர்ந்த மலர் என்ற மாணவியுடன், செந்திலுக்கு காதல் மலர்ந்தது. பள்ளிப் படிப்பை முடித்த மலர், தனது காதலை செந்திலுடன் தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இருவரும் ஊரை விட்டு ஓடினர். பின்னர் சென்னை ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகம் சென்று திருமணத்தைப் பதிவு செய்தனர்.
மகள் காணாமல் போனது குறித்து மலரின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் மலரும், செந்திலும், தெள்ளார் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் நல்லூர், கொண்டையான்குப்பம் கிராம மக்கள் கொதிப்படைந்தனர். நல்லூர் விரைந்த அவர்கள் அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். காலாண்டுத் தேர்வு எழுத வந்த மாணவர்களும் தேர்வைப் புறக்கணித்து விட்டு பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். பின்னர் பள்ளியைப் பூட்டுப் போட்டு பொதுமக்கள் பூட்டி விட்டனர்.
தகவல் கிடைத்ததும் கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதனால் நல்லூர் கிராமத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications