திட்டமிட்டபடி செப்டம்பர் 24ல் அயோத்தி வழக்கில் தீர்ப்பு-அலகாபாத் உயர்நீதிமன்றம்

இதையடுத்து தீர்ப்பு திட்டமிட்டபடி செப்டம்பர் 24ம் தேதி வெளியிடப்படுவது உறுதியாகியுள்ளது.
அயோத்தியில், ராமர்ஜென்ம பூமி, பாபர் மசூதி உள்ள இடம் யாருக்குச் சொந்தம்? கோவிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதா என்பது குறித்த சர்ச்சை பல காலமாக நீடித்து வருகிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக லக்னோ பெஞ்ச்சில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த பெரும் பரபரப்பான வழக்கில் செப்டம்பர் 24ம் தேதி லக்னோ பெஞ்ச் தீர்ப்பளிக்கவுள்ளது.
இந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அதை இன்று லக்னோ பெஞ்ச் விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர், இந்த மனு விசாரணைக்கு தகுதி உடையது அல்ல என்று தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் மனுவைத் தாக்கல் செய்த நபருக்கு ரூ. 10லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முழு ஆயத்த நிலையில் அரசு:
திட்டமிட்டபடி தீர்ப்பு அறிவிக்கப்படும் என கோர்ட் கூறி விட்டதால், உ.பி. முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியானதும் கலவரம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சூழ்நிலையை சமாளிப்பதற்காக பெரும் ஆயத்தங்களுடன் அரசு தயாராகியுள்ளது.
கிட்டத்தட்ட 1.5 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 4000 புற ராணுவப் படையினரும் தயார் நிலையில் உள்ளனர். உ.பி மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பதட்டமான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு பெருமளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தீர்ப்பை அளிக்கவுள்ள 3 நீதிபதிகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றம், லக்னோ பெஞ்ச் ஆகியவற்றுக்கு 1000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அயோத்தி தீர்ப்பு குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். எந்த பிரிவினரும், மற்ற பிரிவினர் மீது வன்முறையை பிரயோகிக்கக் கூடாது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications