பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய 3-வது போர்க் கப்பல்: கராச்சியில் தயாராகும் 4-வது கப்பல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடற்படைத் தலைமை தளபதி பஷீர் நேற்று ஷாங்காயில் தரையில் இருந்து தரையிலும், தரையில் இருந்து வின்னிலும் தாக்கும் அதி நவீன ஏவுகணைகளைக் கொண்ட போர்க் கப்பல் எப்- 22 பி பிரிகேட்டை அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்டார். இது பாகிஸ்தானுக்கு சீனா வழங்கும் 3-வது போர்க் கப்பல் ஆகும்.
இது குறித்து பஷீர் கூறியதாவது,
முதல் இரண்டு பிரிகேட்டைப் போன்றே இதுவும் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் போர்க் கப்பலின் வரவால் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையின் பலம் அதிகரி்க்கும். மேலும், பாகிஸ்தான் கடற்படை தனது பாதையில் முன்னேறவும் இது உதவும்.
கடந்த 2005-ம் நான்கு போர்க் கப்பல்களை பாகிஸ்தானுக்கு வழங்குவதாக சீனா ஒப்பந்தம் செய்தது.
பி.என். எஸ். சைப், பி.என். எஸ். ஜுல்பிகர், பி.என். எஸ். ஷம்ஷீர் என்பது தான் அந்த கப்பல்களின் பெயர்களாகும்.
கராச்சியில் உள்ள கப்பல் கட்டும்தளத்தில் நான்காவது கப்பல் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த பணி திருப்திகரமாக இருக்கிறது என்று கடற்படை தெரிவித்துள்ளது.
போர்க் கப்பல்கள் முன்கூட்டியே வழங்கப்பட்டிருப்பது பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையில் இருக்கும் நல்லுறவைக் காட்டுகிறது. இந்த உறவு அனைத்து துறைகளிலும் உள்ளது என்று அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications