கிரிக்கெட்டில் ஊழலை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்க முடியாது-சரத் பவார்
டெல்லி: கிரிக்கெட்டில் ஊழலை எந்த ரூபத்திலும் ஏற்க முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
தன்னை வந்து சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஸ் பட்டை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார் பவார்.
இதுகுறித்து பவார் கூறுகையில், இதுபோன்ற நான்சென்ஸை எல்லாம் ஏற்கவே முடியாது. ஸ்பாட் பிக்ஸிங் புகாருக்குள்ளான வீரர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நிச்சயம் கடுமையாக தண்டிக்கப்படுவர். கிரிக்கெட்டின் புனிதத்தை காப்பாற்றுவதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்.
பாகிஸ்தான் வீரர்கள் மீதான ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பான ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரணை விரைவில் முடியும் என நம்புகிறோம். இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.
ஸ்காட்லாந்து விசாரணை முடிவடையும் வரை இதில் கருத்து கூற முடியாது. முடிவு தெரியும் போது நடவடிக்கை கடுமையாகவே இருக்கும்.
புகாரின் அடிப்படையில் சிலரை சஸ்பெண்ட் செய்துவைத்துள்ளோம். அந்த வீரர்கள் பாகிஸ்தான் திரும்பிச் செல்ல ஸ்காட்லாந்து யார்டு அனுமதித்துள்ளது. விசாரணைக்குத் தேவைப்படும்போது அவர்களை அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் சம்மதித்துள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் பெயரை இழுப்பது அவசியமற்றது. இந்தியாவுக்கும், பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான புகாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. மேலும் எந்தவிதமான சதியும் இதில் இல்லை. அதை நான் நம்பவில்லை என்றார்.
பவார், பட் சந்திப்பின்போது இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் உறவுகளைப் புதுப்பிப்பது குறித்தும் பேசப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications