கடைகளுக்கு இனி 5 கிலோ சிலிண்டர்!

வரும் திங்கள் கிழமை முதல் இந்த சிலிண்டர்கள் கிடைக்கும்.
வியாபார நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. 20 கிலோ எடையுள்ள இந்த சிலிண்டர்கள் பெரிய ஓட்டல்கள், வியாபார நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடியவை. இதன் விலை ரூ.1,000-க்கும் அதிகமாக உள்ளதால் சிறிய ஓட்டல்கள், டீக்கடைகளில் வீட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சமையல் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்துகிறார்கள்.
ரூ.350 மதிப்பிலான சமையல் கியாஸ் சிலிண்டர்களை ரூ.500, ரூ.600 கூடுதல் விலை கொடுத்து வாங்கி தவறாக பயன்படுத்துவதால் எண்ணை நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த முறைகேட்டைத் தவிர்ப்பதற்காகவே சிறிய வகை கியாஸ் சிலிண்டரை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
5 கிலோ எடையுள்ள இந்த சிலிண்டரை கையில் எளிதாக எடுத்துச்செல்லலாம். குறைவான பயன்பாடு உள்ளவர்கள் இதுபோன்ற சிலிண்டரை ரூ.288.44 கொடுத்து பயன்படுத்தலாம். கியாஸ் சிலிண்டருக்காக பெரிய தொகையை செலவிடத் தேவையில்லை.
இந்த சிறிய வகையிலான கியாஸ் சிலிண்டர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் விற்பனைக்கு வருகிறது. இதற்கான டெபாசிட் ரூ.350. இதை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
சென்னையில் 6 வினியோகஸ்தர்களுக்கும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 30 வினியோகஸ்தர்களுக்கும் இத்தகைய சிறிய சிலிண்டர் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
சென்னை மற்றும் 10 பெரு நகரங்களில் முதல்கட்டமாக இந்த வகை சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளன.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications