நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி மரணத்தில் மர்மம்:ஜெ
சென்னை: திமுக ஆட்சியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தாக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது. அந்த வகையில் தற்போது நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தூத்துக்குடி மண்டல உதவி தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் முருகன் தாக்கப்பட்டு மரணமடைந்திருக்கிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், கன்னியாகுமரி மாவட்ட துணை ஆட்சியர், இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் என தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது.
அந்த வகையில் தற்போது நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தூத்துக்குடி மண்டல உதவி தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் மு. முருகன் தாக்கப்பட்டு மரணமடைந்திருக்கிறார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தூத்துக்குடி மண்டலத்தில் உதவி தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் முருகன். கடந்த 7.9.2010 அன்று வழக்கம் போல் அலுவலகத்திற்கு சென்ற முருகன் வீடு திரும்பவில்லை. ஆனால், மருந்து குடித்ததன் காரணமாக தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது வீட்டிற்கு தகவல் மட்டும் அனுப்பப்பட்டது.
இதை அறிந்த அவரது மனைவி உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தன் கணவரை பார்த்திருக்கிறார். அப்போது தன் கணவரின் இடது தோள்பட்டைக்கு கீழ் ரத்தக்காயம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் 9.9.2010 அன்று புகார் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், 11.9.2010 அன்று முருகன் மரணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தனது கணவரின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதை அறிந்த அவரது மனைவி, 13.9.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் மனு கொடுத்திருக்கிறார்.
அந்தப் புகார் மனுவில், தன் கணவருக்கு குடும்பத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக கடந்த ஆகஸ்டு மாதம் புகார்கள் வழங்கியதாகவும், இதனால் தனக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தன் கணவர் தன்னிடம் கூறியதாகவும், எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மேலும், தன் கணவர் வழக்கமாக கையில் வைத்திருக்கும் டைரி மற்றும் பேக் தன்னிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
எனவே கொலையை தற்கொலையாக காவல் துறையினர் மாற்றி இருக்கின்றனரோ என்ற சந்தேகம் இப்போது அப்பகுதி மக்கள் மனதில் எழுந்துள்ளது. ரேஷன் பொருள்களை கடத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அக்கறை முதல்வர் கருணாநிதிக்கு இருந்திருந்தால், கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டிருக்க வேண்டும்.
மேற்படி சம்பவம் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், மரணமடைந்த முருகனுடைய குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications