சென்னையில் இன்றும் நாளையும் விநாயகர் சிலை ஊர்வலங்கள்: தீவிர பாதுகாப்பு-பலூன் மூலம் கண்காணிப்பு
சென்னை: சென்னையில் இன்றும், நாளையும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடக்கின்றன. இதையொட்டி மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 11ம் தேதி சென்னையில் சுமார் 1,000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. சிலைகளுக்கு போலீசாரும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்த சிலைகளை கடலில் கரைக்கக் கொண்டு செல்லும் ஊர்வலங்கள் இன்றும், நாளையும் நடக்கின்றன. இன்று மாலை சிவசேனா சார்பில் ஊர்வலம் நடக்கிறது.
தங்க சாலை அரசு அச்சகம் அருகில் இருந்து கிளம்பும் இந்த ஊர்வலம் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை சென்றடையும்.
அதே போல புளியந்தோப்பு ஜெயின் பவன் அருகில் இருந்தும் இன்னொரு ஊர்வலம் புறப்பட்டு காசி மேடு துறைமுகத்தை சென்றடையும்.
மூன்றாவது ஊர்வலம் வேளச்சேரி விஜயநகர் பஸ் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு நீலாங்கரை கடற்கரையை சென்றடையும்.
நாளை சூளை வியாபாரிகள் மற்றும் இந்து மக்கள் கட்சி (ஸ்ரீதரன் பிரிவு), இந்து மக்கள் கட்சி (அர்ஜுன் சம்பத் பிரிவு) ஆகியவை சார்பில் ஊர்வலங்கள் நடக்கின்றன.
சூளை, கே.கே.நகர், திருவல்லிக்கோணி, கொன்னூர் நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலங்கள் பட்டினப்பாக்கம் கடற்கரையை சென்றடையும்.
அதே போல நாளை பகல் 1.30 மணி முதல் 5 மணி வரை இந்து முன்னணி சார்பிலும் ஊர்வலம் நடக்கிறது. வள்ளுவர் கோட்டம், திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டை, ஹாரீஸ் ரோடு, முத்துசாமி பாலம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ஊர்வலங்கள் புறப்பட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையை சென்றடையும்.
காவல் துறை வரையறைகளை மீறி ஊர்வலமாகச் செல்ல முயன்றாலோ, அனுமதிக்கப்பட்ட பாதைகள், தேதி மற்றும் நேரங்களை மீறி நடந்தாலோ, மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
இந்த விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடக்கும் பாதைகளில் பாதுகாப்புக்கு சுமார் 10,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், முதல் முறையாக சென்னையில் ராட்சத பலூனில் நவீன கேமரா பொருத்தப்பட்டு விநாயகர் ஊர்வலம் கண்காணிக்கப்படவுள்ளது.
மெரீனாவில் இந்த பலூன் பறக்கும். 300 மீட்டர் தூரத்துக்கு இந்த கேமரா மூலம் கண்காணிக்க முடியும். இந்த பலூன்-கேமராவுக்காக ரூ. 1.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கம் சீனிவாசநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம், கொட்டிவாக்கம் பல்கலை நகர் ஆகிய இடங்களில் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications