ஜெ. வீடு அருகே அதிமுகவினர் திடீர் முற்றுகைப் போராட்டம்
சென்னை : சென்னை போயஸ் கார்டனுக்கு நேற்று இரவு வந்த அதிமுகவினர் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதாவின் வீடு உள்ள போயஸ் கார்டனுக்கு நேற்று மாலை வேன்கள், கார்களில் ஏராளமான அதிமுக தொண்டர் வந்தனர். அவர்களை சாலையின் முகப்பிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஜெயலலிதா வீட்டுக்குச் செல்ல வேண்டும் எங்களை விடுங்கள் என்று அவர்கள் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் போலீஸார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில், சைதை துரைசாமி குடும்பத் திருமணத்திற்காக கொடநாட்டிலிருந்து சென்னை வந்திருந்த ஜெயலலிதா, கல்யாணத்திற்குப் போய் விட்டு போயஸ்கார்டன் திரும்பினார். அவரைப் பார்த்த அதிமுகவினர் வட சென்னையைக் காப்பாற்றுங்கள் அம்மா என்று கோஷமிட்டனர். அவர்களைப் பார்த்து ஜெயலலிதா கும்பிட்டபடி வீட்டுக்குச் சென்றார்.
பின்னர் அவர்களில் சிலரை மட்டும் வரச் சொன்னார். இதையடுத்து சிலர் மட்டும் வீ்ட்டுக்குச் சென்றனர். அவர்களிடம் என்ன பிரச்சினை என்பது குறித்து கேட்டு அறிந்தார் ஜெயலலிதா. பின்னர் அவர்கள் கொடுத்த மனுவையும் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தார்.
வெளியில் வந்த அவர்களிடம் செய்தியாளர்கள் என்ன பிரச்சினை என்று கேட்டபோது, இது எங்களது குடும்பப் பிரச்சினை, நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வோம். அம்மாவிடம் கூறியுள்ளோம். அவர் சரி செய்வார் என்று மட்டும் தெரிவித்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications