46 என்ஜிஓக்கள் வங்கிக் கணக்கை முடக்கியது அரசு: ஆந்திரா முதலிடம்
டெல்லி: வெளிநாட்டு நிதிகளைப் பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைக் (என்ஜிஓ) கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு கிடுக்கிப்பிடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 46 என்ஜிஓக்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்துள்ளது.
மேலும், 41 அமைப்புகள் இனி வரும் காலத்தில் வெளிநாட்டு நிதியை வாங்க முடியாதவாறும், பயன்படுத்த முடியாதவாறும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, கேரளா, தமிழ் நாடு, மஹாராஸ்டிரா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் உள்ள அமைப்புகளுக்கு எதிராகத் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டி.என். ஏ. தெரிவித்துள்ளது.
தடை விதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் 21 நிறுவனங்கள் ஆந்திராவைச் சேர்ந்தவையாகும். 5 அமைப்புகளுடன் கர்நாடகா இரண்டாவது இடத்திலும், 4 அமைப்புகளுடன் குஜராத் 3-வது இடத்திலும், 3 அமைப்புகளுடன் மஹாராஸ்டிரா 4-வது இடத்திலும், 2 அமைப்புகளுடன் ராஜஸ்தான் 5-வது இடத்திலும் உள்ளன.
மேலும் இந்த நிறுவனங்கள் மீது 9 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இவற்றை சிபிஐ விசாரிக்கவுள்ளது.
கடந்த 2006-07-ம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து என்ஜிஓ அமைப்புகளுக்கு பெருமளவில் நிதி வந்தது. அந்த ஆண்டில், ரூ. 11, 336 கோடி வந்தது. இதை 18, 996 தன்னார்வத் தொண்டு அமைப்புகள் பெற்றன. கடந்த 2007-08-ம் ஆண்டில் நிதி குறைந்து 18, 796 அமைப்புகள் ரூ. 9, 663 கோடி பெற்றுள்ளன.
இவற்றில் தமிழ் நாட்டிற்கு ரூ. 5, 397 கோடி சென்றுள்ளது. இதையடுத்து டெல்லிக்கு ரூ. 4,055 கோடியும், மஹாராஸ்டிராவிற்கு ரூ. 2, 744 கோடியும், குஜராத்திற்கு ரூ. 1,070 கோடியும் சென்றுள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பு மட்டும் ரூ. 318.59 கோடிகள் பெற்றுள்ளது.
வெளிநாட்டு நிதிகளை பெறுவதையும், பயன்படுத்துவதையும் ஒழுங்குபடுத்துவது தான் எப்.சி.ஆர்.எ.வின் நோக்கம். வெளிநாட்டு நிதிகளின் வரத்தைக் கண்காணிக்க பாராளுமன்றம் அன்மையில் தான் எப்.சி. ஆர். எ. சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications