முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம்-இளைஞரால் சலசலப்பு-கலவரம் தவிர்ப்பு
முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஒரு இளைஞரால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் போலீஸாரின் சமயோஜிதத்தால், பெரும் கலவரம் மூளாமல் தவிர்க்கப்பட்டு விட்டது.
ஆண்டுதோறும் முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மோதல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இதன் காரணமாக முஸ்லீம் குடியிருப்புகள் வழியாக ஊர்வலம் போக கோர்ட் தடை விதித்தது.
இருப்பினும் ஊர்வலம் இந்தப் பாதைகள் வழியாக செல்வது தொடர் கதையாக நீடிக்கிறது. கடந்த ஆண்டு முதல் மாற்றுப் பாதை வகுக்கப்பட்டு அந்த வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த முறையும் பிரச்சினை வந்து விடாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது.
நேற்று மதியம் மூன்று மணிக்கு ஜாம்பவான் ஓடை கிராமத்தில் உள்ள சிவன் கோயில்களில் இருந்து புறப்பட்டு, சுமார் ஐந்து கிலோமிட்டார் வரை ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்தின் இறுதியில் கிழக்குக்கடற்கரை சாலியில் உள்ள பாமணி ஆற்றில் விநாயகர் சிலைல கரைக்கப்பட்டது.
விநாயகர் ஊர்வலம் இஸ்லாமியர் பகுதிக்குள் வந்துகொடிருந்த ஒபோது, வேலூர் எம்.பி. அப்துல்ரகுமான் வீட்டில் கல் எறிய முயற்சித்த ஒரு இளைஞரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் வேனுக்குள் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர்.
அந்த இளைஞர் தடுத்து பிடிக்கப்பட்டதால் பிரச்சினை ஏதும் இல்லாமல் போய் விட்டது. இல்லாவிட்டால் பெரும் அமளியாகியிருக்கும். இந்த சிறு சம்பவத்தால் லேசான பதட்டம் ஏற்பட்டு பின்னர் தணிந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications