கொல்கத்தாவில் நடந்த வாலிபால் போட்டியில் தேசிய கீதம் பாதியில் நிறுத்தம்
கொல்கத்தா: கொல்கத்தாவி்ல் நேற்று நடந்த வாலிபால் போட்டியின்போது தேசிய கீதத்தை திடீரென நிறுத்தி அதை அவமதித்துள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்ளரங்கில், ஆசிய சீனியர் வாலிபால் சேம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. நேற்று நேதாஜி உள்ளரங்கில் இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையேயான போட்டி நடந்தது.
போட்டிக்கு முன்பு இரு நாட்டு தேசிய கீதங்களும் ஒலிக்கப்பட்டன. இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருந்தபோது பாதியிலேயே அதை நிறுத்தி விட்டனர்.
இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சர்ச்சை குறித்து போட்டிகளின் தலைவர் ஏ. ரமணா ராவ் கூறுகையில்,
நிகழ்ச்சி ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் அடங்கிய மூல நகல் பிரதியில் ஒவ்வொரு நாட்டின் தேசிய கீதத்திற்கும் 45 விநாடிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
நம் நாட்டு தேசிய கீதம் 1 நிமிடம் 15 விநாடிகள் பாடுவதால் 45 விநாடிக்குள் முடிக்க முடியவில்லை. இதனால் அந்த கால அளவுக்குள் பாடலை நிறுத்தி விட்டனர்.
தேசிய கீதத்தை சுருக்கித் தருமாறு இந்திய ஒலிம்பிக் அமைப்பைக் கேட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications