முத்தரையர்களுக்கு முன்னுரிமை தரும் கட்சிகளுடன் கூட்டணி-முத்தரையர் பேரவை அறிவிப்பு
தஞ்சை: முத்தரையர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி வைக்கப் போவதாக முத்தரையர் பேரவை அறிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் முத்தரையர் பேரவையின் மாநாடு நடந்தது. இதற்கு மாநிலத் தலைவர் ஆர்.விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஆர். விஸ்வநாதனின் மகன் நடிகர் பரதன் பேசியதாவது,
சாதி வாரி கணக்கெடுப்பிற்கு ஒத்துழைப்பு கொடுத்த சோனியா காந்திக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், திருச்சி வந்த தமிழக துணை முதல்வர் முக.ஸ்டாலினிடம் முத்தரையர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் சேர்க்க வேண்டும் என்று பேரவையின் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தோம்.
எங்களது கோரிக்கையை ஏற்று திருச்சி விழாவில் மு.க. ஸ்டாலின் பேசும் போது, இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். அதற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் முத்தரையர் இனத்திற்கு தனி இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றிற்கு எந்தக் கட்சி முக்கியத்துவம் அளிக்கிறதோ அந்தக் கட்சியுடன் தான் கூட்டணி அமைக்கப்படும் என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications