தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது காங்.கின் விருப்பம்-இளங்கோவன்

நெல்லை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து கடந்த 4 மாதமாக கூறிவருகிறேன். கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் கமிஷன் பெறப்படுகிறது. இதில் யார் யாருக்கு போகிறது என தெரியவில்லை. இந்த முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதால், தமிழக அரசு இதற்கு உடந்தையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் திட்டங்களை செயல்படுத்தும்போது இடையில் இருப்பவர்கள் முறைகேடு செய்கிறார்கள். இதனை தமிழக அரசு தண்டிக்க வேண்டும்.
நெல்லை ராதாபுரம் பஸ் நிலையத்தில் காமராஜர் சிலையையும் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பல மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ராதாபுரத்தில் இருந்து முதல்வர் கருணாநிதியின் பெற்றோர் சிலை அகற்றப்பட வேண்டும் என நாங்கள் கோரிக்கை
வைக்கவில்லை, காமராஜர் சிலையையும் வைக்க வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்துள்ளோம். கன்னியாகுமரியில் மார்ஷல் நேசமணி மற்றும் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முதல்வர் கருணாநிதி ஏற்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்காக தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் செய்வது குறித்து காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்யும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியினரின் விருப்பம் என்றார் இளங்கோவன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications