பூமிக்கு அருகில் பளிச் ஜூபிடர்-டெலஸ்கோப் மூலம் பார்க்க ஏற்பாடு
சென்னை: பூமிக்கு அருகே பளிச்சிடும் பிரகாசத்துடன் தெரியும் ஜூபிடரைப் பார்க்க சென்னை பிர்லா கோளரங்கத்தில் டெலஸ்கோப் வசதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசதிக்காக இந்த வசதி 25ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரியக் குடும்பத்திலேயே மிகப் பெரிய கோள் ஜூபிடர் தான். இந்த ஜூபிடர் தற்போது பூமிக்கு மிக அருகே, அதாவது 59 கோடி கிலோமீட்டர் தொலைவில் நெருங்கி வந்துள்ளது. இனால் வழக்கத்தை விட பிரகாசமாக இது தோன்றுகிறது.
கடந்த 47 ஆண்டுக்குப்பின் இப்போது தான் ஜூபிடர், பூமிக்கு அருகில் மிகவும் நெருங்கி வந்துள்ளது. மீண்டும் 2022-ம் ஆண்டு தான் இவ்வாறு நெருக்கமாக வரும்.
மாலையில் சூரியன் மறைந்த பிறகு வெட்ட வெளியில் நின்று கிழக்கு திசையில் பார்த்தால் ஜூபிடரை தெளிவாகப் பார்க்கலாம்.
இந்த அரிய காட்சியை, பொதுமக்கள் கண்டு களிப்பதற்காக பிர்லா கோளரங்கத்தில் டெலஸ்கோப் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி 25ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இலவசமாக இந்த வசதியைப் பயன்படுத்தி ஜூபிடரைப் பார்த்து குதூகலிக்கலாம்.












Click it and Unblock the Notifications