அயோத்தி தீர்ப்பு-'பல்க்' எஸ்எம்எஸ் அனுப்ப செப். 29 வரை தடை நீட்டிப்பு
டெல்லி: அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து ஒரே சமயத்தில் மொத்தமாக எஸ்.எம்.எஸ், எம்எம்எஸ் அனுப்ப விதித்த தடையை மத்திய அரசு விலக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அத்தடையை செப்டம்பர் 29ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கான தடை உத்தரவு நேற்றே அமலுக்கு வந்தது. நாளை வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று அயோத்தி தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 29ம் தேதி வரை தடையை நீட்டித்துள்ளது மத்திய அரசு.
தீர்ப்பையொட்டியும், தீர்ப்பிற்குப் பிறகும் விஷமிகள், விஷமனத்தனமான செய்திகளையும், படங்களையும் அனுப்பாமல் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது.
இது செமி பைனல்-ஜி.கே.பிள்ளை:
முன்னதாக அயோத்தி தீர்ப்பை செமி பைனல் போலத்தான் என்று வர்ணித்திருந்தார் மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை. இதுகுறித்துத அவர் கூறுகையில், இது ஒரு போட்டியின் செமி பைனல்தான். இறுதிப் போட்டிஅல்ல. தீர்ப்பு வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல்தான் வரவுள்ளது. இஸ்லாமியர்கள் அதற்குள் தங்களது வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்திருப்பார்கள்.சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறையாகும். எனவே திங்கள்கிழமை அப்பீல் செய்ய முடியும். அதன் பின்னர் மீண்டும் தற்போதைய நிலையே தொடர வாய்ப்புள்ளது என்றார் பிள்ளை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications