காமன்வெல்த் போட்டிகளின்போது லஷ்கர் இ தொய்பா தாக்கலாம்-அமெரிக்கா எச்சரிக்கை

இதுகுறித்து அமெரிக்க தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் இயக்குநர் மைக்கேல் லீட்டர் கூறுகையில், டெல்லி காமன்வெல்த் போட்டியை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் குறி வைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்தப் போட்டிகள் இந்தியாவுக்கு மிக முக்கியமானவை என்பதால் அதை சீர்குலைக்க லஷ்கர் முயலலாம்.
நாளுக்கு நாள் இந்த தாக்குதல் அபாயத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே இந்தியா மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.
இதை இந்திய அரசும் ஊகித்தே உள்ளது. இதனால்தான் எந்த வகையான தாக்குதலையும் சமாளிக்கக் கூடிய வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.
காமன்வெல்த் போட்டிக்கு மட்டும் 80,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்கள் போக 17,500 புற ராணுவப் படையினர், 3000 கமாண்டோக்கள், 100 சதி முறியடிப்புப் படையினரும் டெல்லியில் குவிக்கப்படுகின்றனர்.
லீட்டர் தொடர்ந்து கூறுகையில், காஷ்மீரிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் லஷ்கர் இயக்கம் தனது ஆதிக்கத்தை ஏற்கனவே பலமுறை நிலைநாட்டியுள்ளது. இது டெல்லி காமன்வெல்த் போட்டியிலும் எதிரொலிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கிறோம்.
தெற்காசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய மிரட்டலாக உருவெடுத்துள்ளது லஷ்கர் இ தொய்பா என்றார் லீட்டர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications