பாகனை அடித்துக் கொன்ற பசியால் வாடிய சர்க்கஸ் யானை!
உடுமலைப்பேட்டை: பசியால் வாடிய சர்க்கஸ் யானை எதிரே பிஸ்கெட் சாப்பிட்ட பாகனை யானை அடித்து கொன்றது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து ராஜ்கமல் சர்க்கஸ் நிறுவனம் 4 லாரிகளில் 4 யானைகளை ஏற்றிக் கொண்டு திருநெல்வேலிக்கு வந்தனர். லாரிகளில் கனி (55) உள்பட 4 யானை பாகன்கள் உடன் வந்தனர்.
யானைகளுக்கு வழியில் உணவு தராமல் அழைத்து வந்ததால் அவை பசியில் இருந்தன.
இந் நிலையில் லாரிகளை உடுமலைப்பேட்டை அருகே சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பாகன்கள் டீ குடித்தனர். பின்னர் யானைகள் எதிரே பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு கிளம்பினர்.
பாகன் கனி, 40 வயதான பெண் யானை இருந்த லாரியில் ஏறினார். அப்போது பசியில் இருந்த அந்த யானை கனியை தும்பிக்கையால் தூக்கி சுழற்றி வீசியது. இதில் அவர் படுகாயமடைந்து மயங்கினார்.
இதையடுத்து அவரை மற்ற பாகன்கள் அவரை உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
பாகன் கனி அந்த பெண் யானையை கடந்த 20 ஆண்டுகளாக பராமரித்து வந்தவராம். அவர் என்ன சாப்பிட்டாலும் அந்த யானைக்கும் கொடுப்பாராம்.
யானை பசியில் இருப்பதை அறியாமல் அதன் கண் எதிரில் பிஸ்கெட் சாப்பிட்டதால் அது கோபத்தில் இருந்துள்ளது. பிஸ்கெட் சாப்பிட்டப்படியே அவர் லாரியில் ஏறியதும் அவரை தாக்கி கொன்றுள்ளது.
இப்போது கனியை கொன்ற யானையின் கண்களில் இருந்தும் நீர் வழிந்து கொண்டுள்ளது. பாகனை கொன்று விட்ட வேதனையில் கண்ணீர் விட்டுக் கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து அனைத்து யானைகளும் திரும்ப கேரளாவுக்கே அனுப்பப்பட்டுவிட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications