ஒரே வாரத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 110 பேர் பலி: நாடு முழுவதும் 2,427 பேர் பலி
டெல்லி: நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 110 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது இந்தியாவில் பரவுவது 2வது முறையாகும். இரண்டாம் தடவை பரவும் பன்றிக் காய்ச்சல் வைரசுக்கு வீரியம் அதிகம். அதைக் கட்டுப்படுத்துவதும் கடினம் என்று உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு பலர் பலியாகி வருகின்றனர். இதில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 110 பேர் பலியாகியுள்ளனர். செப்டம்பர் 19-ம் தேதியுடன் முடிவடைந்த ஒரு வாரத்தில் மகாராஷ்டிராவில் 42 பேரும், குஜராத்தில் 29 பேரும், மத்திய பிரதேசத்தில் 14 பேரும், டெல்லியில் 10 பேரும், உத்தர பிரதேசத்தில் 3 பேரும், ஹரியானா, ஆந்திரா, கேரளா, உத்தரகண்ட், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா 2 பேரும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் பன்றிக் காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,427. இதுவரையில் அரசு மற்றும் தனியார் ரத்தப் பரிசோதனை நிலையங்களில் 1,83,027 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்ததில் 43,283 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு 12 பேர் இதுவரை இறந்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications