முன் பதிவு செய்யாத ரயில் பெட்டிகளில் கண்டக்டரை நியமிக்க கோரி வழக்கு
சென்னை: முன் பதிவு செய்யாத ரயில் பெட்டிகளில் கண்டக்டர்களை நியமிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்த்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில்,
இந்தியா முழுவதும் ஓடும் ரயில்களில் முன் பதிவு செய்த பெட்டிகளை தவிர மற்ற பெட்டிகளில் ஏற பயணிகள் சாதாரண டிக்கெட் எடுக்கிறார்கள். இதற்காக டிக்கெட் கெளண்டர்களில் வரிசையில் நின்று டிக்கெட் பெற தாமதம் ஏற்படுகிறது. இதனால் வரிசையில் நிற்கும்போதே ரயில்களை தவற விடுகின்றனர். டிக்கெட் எடுத்த பிறகும் முன்பதிவு செய்யாத பெட்டியை தேடி, கடைசி நேரத்தில் அலைவதில் பிரச்சனை ஏற்படுகிறது.
ரயில் புறப்படும் நேரத்தில் ஓடிச் சென்று ஏற வேண்டிய நிலை உள்ளது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் சாதாரண பெட்டிகளில் ஏற முடியாத நிலை உள்ளது. எனவே இந்தியா முழுவதும் கெளண்டர்களை மூடிவிட்டு முன்பதிவு செய்யாத பெட்டிகளுக்கு உள்ளேயே ஓடும் ரயிலில் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதற்காக ஓடும் ரயில்களில் கண்டக்டர்களை நியமிக்க ரயில்வே துறைக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரணைக்கு ஏற்று ரயில்வே துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications