காங்கிரசுடன் கூட்டணி சேரும் கட்சியே வெல்லும்-தங்கபாலு
புதுக்கோட்டை: வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி சேரும் கட்சியே வெற்றிபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் முறைப்படி இணையும் விழா திருச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடக்கவுள்ளது
இந் நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் நடந்தது.
இக் கூட்டத்துக்கு முன் நிருபர்களிடம் தங்கபாலு பேசுகையில்,
வரும் 9ம் தேதி திருச்சியில் காங்கிரசின் 125வது ஆண்டு விழா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தலைவர் சோனியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைகிறார்.
மத்திய அரசின் வளர்ச்சி திட்டப் பணிகள் தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு நிலவரம் மிகச் சிறப்பாக உள்ளது.
தற்போது காங்கிரஸ்-திமுக கூட்டணி வலுவாக உள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து சோனியா- ராகுல் காந்தி ஆகியோர் அறிவிப்பார்கள்.
வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி சேரும் கட்சியே வெற்றிபெறும். எனக்கு சோனியா உயிர் நாடியாகவும், ராகுல் உயிர் மூச்சாகவும் விளங்கி வருகின்றனர் என்றார் தங்கபாலு.
அப்போது திருநாவுக்கரசரும் உடனிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications