மின்சார கேபிள் அறுந்ததால் 1 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு : பயணிகள் அவதி
சென்னை: சென்னை பூங்காநகர் ரயில் நிலையம் அருகில் மின்சார கேபிள் அறுந்து விழுந்ததால் அங்கு சுமார் 1 மணி நேரம் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் நேற்று காலை எழும்பூருக்கும் பூங்காநகருக்கும் இடையில் உள்ள பாலத்திற்கு அருகில் வரும் போது மின்சார கேபிள் திடீர் என்று அறுந்து விழுந்தது.
இதனால் அந்த ரயில் பாதி வழியில் நின்றது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அந்த வழியாக வரும் அனைத்து மின்சார ரயில்களையும் ஆங்காங்கே நிறுத்தினர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் அறுந்த கேபிளை சரி செய்தனர். அதன் பிறகு சுமார் 1 மணி நேரம் கழித்து மீண்டு ரயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.












Click it and Unblock the Notifications