உச்ச நீதிமன்ற உத்தரவு: அரசு, பாஜக, முஸ்லீம் வக்பு வாரியம், இந்து மகாசபா வரவேற்பு
டெல்லி: அயோத்தி தீர்ப்பை வெளியிடலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளதற்கு மத்திய அரசு, பாஜக, சன்னி முஸ்லீம் வக்பு வாரியம், அகில இந்திய இந்து மகாசபா உள்ளிட்ட அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், இந்த உத்தரவை வரவேற்கிறோம். இது குழப்பத்தை தீர்ப்பதாக உள்ளது. தெளிவாக உள்ளது. முதிர்ச்சியான தீர்ப்பு இது.
இந்த சட்டக் குழப்பம் நீடிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. எந்தப் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு ஏற்படுவதையே அரசு விரும்புகிறது. அதற்கான சாத்தியக் கூறுகளை நாங்கள் ஒருபோதும் எதிர்த்ததில்லை. அந்த வகையில் இந்தப் பிரச்சனைக்கும் சுமூகமான தீர்வு ஏற்பட்டால் முதலில் மகிழ்ச்சி அடைவது மத்திய அரசுதான்.
இருப்பினும் அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை அளிக்கவுள்ளது. அதை அனைத்துத் தரப்பினரும் அமைதியுடன் வரவேற்று சட்ட முறைக்கு மதிப்பளிக்க வேண்டும்.
நமது மக்கள் மிகுந்த முதிர்ச்சி உடையவர்கள். எனவே தீர்ப்பை எந்தவிதப் பிரச்சனையுமின்றி வரவேற்பார்கள் என நம்புகிறோம்.
தீர்ப்பு வரட்டும். அதில் அதிருப்தி அடைபவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுக முடியும் என்றார் மொய்லி.
பாஜகவும் வரவேற்பு:
அதே போல உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வரவேற்றுள்ளன.
பாஜக செய்தித் தொடர்பாளரும், அயோத்தி வழக்கில் ஒரு மனுதாரரான பாபா தரம்தாஸின் வக்கீலுமான ரவி சங்கர் பிரசாத் கூறுகையில்,
இந்த தீர்ப்பை முழுமையாக வரவேற்கிறோம். இதன் மூலம் நீதி பரிபாலனத்திற்கு வழி ஏற்பட்டுள்ளது.
தீர்ப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். எந்த வகையான தீர்ப்பாக இருந்தாலும் உரியவர்கள் அதை தலைவணங்கி ஏற்க வேண்டும் என்றார்.
அதேபோல சன்னி முஸ்லீம் வக்பு வாரியம், அகில இந்திய இந்து மகாசபா உள்ளிட்ட அமைப்புகளும் உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications