காமன்வெல்த் போட்டியை பிரதீபா பாட்டீல், சார்லஸ் இணைந்து தொடங்கி வைப்பார்கள்

இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளின் கூட்டமைப்புதான் இந்த காமன்வெல்த். இவர்கள் எல்லாம் ஒன்று கூடி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் போட்டிதான் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி. ஒவவொரு முறை போட்டி தொடங்கும்போதும் அதை இங்கிலாந்து ராணியார்தான் தொடங்கி வைப்பார். அதாவது அடிமைத்தனத்திலிருந்து மீண்டாலும் அந்த அடிமைப் பாரம்பரியத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர் காமன்வெல்த் அமைப்பினர்.
காமன்வெல்த் போட்டிக்கான பேட்டன் ஓட்டத்தையும் இங்கிலாந்து அரசியார்தான் தொடங்கி வைப்பார்.
இந்த முறை டெல்லி காமன்வெல்த் போட்டியையும் ராணி எலிசபெத் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ரொம்ப பிசியாக இருக்கிறாராம். இதனால் டெல்லிக்கு வர மாட்டாராம். இதனால் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலே இந்த முறை போட்டியைத் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காலம் காலமாக இருந்து வரும் பாரம்பரியத்தை (அதாவது போட்டியைத் தொடங்கி வைப்பது) இழக்க விரும்பாத இங்கிலாந்து ராஜகுடும்பம், தற்போது இளவசர் சார்லஸை அனுப்பி வைத்து போட்டியைத் தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து காமன்வெல்த் அமைப்பிடம் தெரிவித்து விட்டதாம் ராஜ குடும்பம். அதுவும் இதை ஏற்றுக் கொண்டது. இதையடுத்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் போட்டியைத் தொடங்கி வைக்க மாட்டார், சார்லஸ்தான் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது.
காமன்வெல்த் அமைப்பு மற்றும் இங்கிலாந்து அரசின் இந்த செயல், இந்தியாவில் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்தியாவை அவமதித்து விட்டார் ராணி எலிசபெத். இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இது அவமானம் என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்தள்ளன.
இதையடுத்து இந்தப் பிரச்சினையை சமாளிக்க புதிய திட்டத்தை காமன்வெல்த் அறிவித்துள்ளது. அதன்படி பிரதீபா பாட்டீலும், சார்லஸும் இணைந்து போட்டியைத் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டியை தொடங்கி வைப்பதாக சார்லஸ் அறிவிப்பாராம். போட்டிகள் தொடங்குவதாக பிரதீபா பாட்டீல் கூறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications