அயோத்தியை வைத்து காங்கிரஸ் அரசியல் நாடகம்: கல்யாண் சிங்
லக்னெள: அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் நாடகமாடி வருவதாக பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உத்தரப் பிரதேச பாஜக முதல்வராக இருந்த கல்யாண் சிங் கூறியுள்ளார்.
அரசியல்ரீதியில் ஒதுக்கப்பட்டுவிட்ட கல்யாண் சிங், கடந்த வியாழக்கிழமை தனது பலத்தைக் காட்ட அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு பெரும் பரபரப்புக்கிடையே வந்தார்.
ஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு ஆதரவாக கூட்டம் கூடவில்லை. இதனால் அதிருப்தியுடன் லக்னெள திரும்பிய அவர் நேற்று நிருபர்களிடம் பேசுகையில்,
அயோத்தி வழக்கை மையமாக வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் நாடகமாடி வருகிறது. தீர்ப்பை ஒத்தி வைப்பதை வரவேற்றுள்ளதன் மூலம் இந்தப் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு வந்து விடக்கூடாது என்று அந்தக் கட்சி நினைப்பது தெளிவாகிவிட்டது.
வழக்கை நீட்டிப்பதன் மூலம் அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறது. மக்களை உணர்ச்சிவசப்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் முயற்சிக்கிறது.
அயோத்தி விவகாரம் முடிந்து விட்டால் அவர்கள் அதை வைத்து அரசியல் நடத்த முடியாது.
எனவே இந்த விவகாரம் முடிவுக்கு வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை. அதை வைத்து அரசியல் நடத்தவே விரும்புகின்றனர்.
அயோத்தி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியாது என்பது முன்னரே உறுதியாகிவிட்டது. இந்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறுவது காலம் கடத்தும் முயற்சி.
அயோத்தி நிலம் என்பது உண்மை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த விஷயம். நீதிமன்றத்தால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வை அளிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார் கல்யாண் சிங்.
அரசியல் ஆதாயம் தேடும் பாஜக-காங்கிரஸ் புகார்:
அயோத்தி விவகாரத்தில் பாஜக தொடர்ந்து அரசியலைப் புகுத்தி ஆதாயம் தேடப் பார்க்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், தீர்ப்பு கூறுவதை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்ததற்குக் கூட காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று கூறி, அதிலும் அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக முயல்கிறது.
அயோத்தி விவகாரத்தில் பாஜக பொறுப்பற்று செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டும், அல்லது பேச்சு மூலம் தீர்க்க வேண்டும் என்ற இரு வழிகள் மட்டுமே உள்ளன என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications