விழுப்புரம் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு அடி உதை
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு அடி உதை விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தை அடுத்த நந்திவாடி பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன். விவசாயி. இவர் அரசு வீடு கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
இதற்கு காரணம் நந்திவாடி பஞ்சாயத்து தலைவர் சீத்தாராமன் தான் என கருதிய வீரப்பன், இது குறித்து பஞ்சாயத்து தலைவரிடம் சென்று விவரம் கேட்டார்.
அப்போது வீரப்பனுக்கும், நந்திவாடி பஞ்சாயத்து தலைவர் சீத்தாராமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் வீரப்பன் கடும் ஆத்திரம் அடைந்து தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு வந்து பஞ்சாயத்து தலைவர் சீத்தாராமனை கத்தி, இரும்பு பைப், உருட்டுக் கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படுகின்றது.இதில் படுகாயம் அடைந்த பஞ்சாய்தது தலைவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து நந்திவாடி பஞ்சாயத்து தலைவர் சீத்தாராமன் அளித்த புகாரின் பேரில் வீரப்பன், அவரது மனைவி முனியம்மாள், நடேசன் உள்ளிட்ட 10 பேர் மீது கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications