கேரளாவில் போலி மாணிக்க கல் விற்ற மந்திரவாதி கைது
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே ரூ.10 லட்சத்துக்கு போலி மாணிக்க கல் விற்று மோசடி செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் நசீர். அரபு நாட்டில் வேலை செய்து வருகிறார். சமீபத்தில இவர் ஊருக்கு வந்தார். அப்போது திருவனந்தபுரம் அரியநாடு பகுதியைச் சேர்ந்த ஷாநவாஸ் என்பவர் நசீரை சந்தித்தார்.
தான் மந்திரவாதி என்றும், தன்னிடம் ரூ.25 லட்சம் மதிப்பிலான மாணிக்க கல் இருப்பதாகவும் அதை வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் எனவும் கூறினார். ஷாநவாஸ் கூறியதை உண்மை என நம்பிய நசீர் தன்னிடம் ரூ.10 லட்சம் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார்.
உடனே அந்த மந்திரவாதி உங்களுக்காக மாணிக்க கல்லை ரூ.10 லட்சத்திற்கு தருகிறேன் என கூறினார். இதையடுத்து நசீர் மந்திரவாதியிடம் ரூ. 10 லட்சம் கொடுத்து மாணிக்க கல்லை பெற்றுக் கொண்டார்.
அந்த கல்லை வாங்கிய அவர் மற்றொருவரிடம் கொடுத்து சோதனை செய்ததில் அது போலி எனத் தெரிய வந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வட்டியூர்காவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாநவாசை கைது செய்தனர்.
ஷாநவாஸ் இதே போல் பலரிடம் போலி மாணிக்க கல் விற்று மோசடி செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications