உத்தர பிரதேசத்தில் 6-ம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலை

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவி ஒருவர் பள்ளி வளாகத்திலேயே கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு பள்ளியில் சுனிதா (13) என்பவர் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பள்ளிக்குச் சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

காலையில் நன்றாக சென்ற மாணவிக்கு திடீர் என்று என்னவாயிற்று என்று குழம்பினார்கள். அவர்கள் குழப்பத்திற்கு பதில் பிரேத பரிசோதனையில் கிடைத்தது. மாணவியை யாரோ கற்பழித்து கொலை செய்துள்ளது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

ஆனால் சுனிதாவின் கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இதற்கிடையே சம்பந்தப்பட்ட பள்ளி மூடப்பட்டு, அங்கு பணி புரியும் ஆசிரியர்களும், ஊழியர்களும் தலைமறைவாகிவிட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+