10 நாட்களில் ரூ 2297 கோடி வருவாய்... ரயில்வே சாதனை!
டெல்லி: பத்தே நாட்களில் ரூ 2297 கோடியை வருவாயாக ஈட்டி சாதனைப் படைத்துள்ளது ரயில்வே.
இம்மாதம் 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான 10 நாட்களில் ஈட்டப்பட்ட வருவாய் இது.
ரெயில்வே துறைக்கு கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ரூ. 2170.90 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டின் அதே 10 நாள் வருமானம் ரூ. 2297.01 கோடியாக அதிகரித்துள்ளது. இது 5.81 சதவீத உயர்வாகும்
கடந்த ஆண்டின் இதே 10 நாட்களில் ரெயில்வே துறைக்கு சரக்குப் போக்குவரத்து மூலமாக ரூ. 1487.33 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டில் இது 1497.63 கோடியாக அதிகரித்துள்ளது. இது 0.69 சதவீத உயர்வாகும்.
கடந்த ஆண்டில் பயணச்சீட்டு மூலம் கிடைத்த வருமானம் ரூ. 601.68 கோடி. இந்த ஆண்டின் இதே 10 நாட்களில் இது 18.58 சதவீதம் அதிகரித்து ரூ. 713.45 கோடியாக உயர்ந்துள்ளது. பெட்டிகள் தயாரிப்பு மூலம் கிடைத்த வருமானம் ரூ. 59.67 கோடியில் இருந்து ரூ. 62.60 கோடியாக அதிகரித்துள்ளது. இது 4.68 சதவீத உயர்வாகும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 10 நாட்களில் 19.75 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டில் இது 23.32 கோடியாக அதிகரித்துள்ளது.
புறநகர் ரெயில்களில் முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 10.64 கோடியில் இருந்து 12.75 கோடியாக அதிகரித்துள்ளது. இதர ரெயில்களில் முன்பதிவு செய்தோர் எண்ணிக்கை 9.10 கோடியில் இருந்து 10.46 கோடியாக அதிகரித்துள்ளது.
பண்டிகை சீஸன் என்பதால் அடுத்து வரும் நாட்களில் வருவாய் இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications