நாளை அயோத்தி தீர்ப்பு: நாடு முழுவதும் அதிதீவிர பாதுகாப்பு-தயார் நிலையில் மத்திய படைகள்

மக்களின் அச்சத்தைப் போக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்ட அனைத்து மாநில நிலைமைகளையும் உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது.
நாடு முழுவதும் 16 இடங்களில் மத்தியப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகளை உடனுக்குடன் அழைத்துச் செல்ல விமானப் படையின் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் உள்ளன.
அயோத்தி நில விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தனது தீர்ப்பை வழங்கவுள்ளது.
இதனால் நாடு முழுவதும் அச்சமான சூழ்நிலை நிலவுவதால் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வன்முறைகள் மூளாமல் தடுக்குமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக நிலைமையை கண்காணிக்க டெல்லியில் உள்துறை அமைக்கம் கட்டுப்பாட்டு அறையை உருவாக்கியுள்ளது. அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆய்வு செய்தார்.
மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த இடங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பது குறித்து இன்டலிஜென்ஸ் பீரோ கொடுத்துள்ள உளவுத் தகவல்களின் அடிப்படையில், அந்தந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் மிகவும் பிரச்சனை மிகுந்த இடங்களுக்கு மத்தியப் படைகள் அனுப்பப்பட்டுவிட்டன. கலவரம் நடக்கலாம் என்று கருதப்படும் இடங்களுக்கு மிக அருகில் இந்தப் படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. மோதல் ஏற்பட்டால், இந்தப் படைகள் உடனடியாக அந்த இடத்துக்குச் சென்று சேரும் வகையில் வசதிகளை செய்யவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் டெல்லி, அகமதாபாத், கோவை, டார்ஜிலிங் உள்ளிட்ட நாட்டின் 16 இடங்களி்ல் மத்திய ரிசர்வ் படை, மத்திய தொழில் பாதுகாப்புபடை உள்ளிட்ட மத்திய துணை ராணுவ படைகள் தவிர, தேசிய பாதுகாப்பு படை, கமாண்டோ படை, அதிவிரைவு படை, ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகளை உடனுக்குடன் அழைத்துச் செல்ல விமானப் படையும் தயாராக உள்ளது.
எங்காவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், உடனடியாக அந்தப் படையினர் சம்பவ இடததை அடைய விமானப் படைக்குச் சொந்தமான ஐ.எல்.-76 மற்றும் ஏ.என்.-32 ரக விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications