தேசிய ஒருமைப் பாட்டில் புதிய அத்தியாயம்-அயோத்தி தீர்ப்பு குறித்து அத்வானி
டெல்லி: இந்துக்கள் ராமர்கோவில் கட்ட தற்போதைய அயோத்தி தீர்ப்பு வழி வகுத்துள்ளது. அதேசமயம், இந்துக்களும்,முஸ்லீம்களும் இணைந்து நல்லிணக்கத்துடன் செயபல்படுவதற்கான வாய்ப்பும், தேசிய ஒருமைப்பாட்டில் புதிய அத்தியாயம் மலரவும் இது வழி வகுத்துள்ளது என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் அத்வானி.
அயோத்தி தீர்ப்பு வெளியானவுடன் அத்வானி வீட்டில் பாஜக தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது பாஜக தலைவர் நிதின் கத்காரியும் உடன் இருந்தார்.
பின்னர் அத்வானி வெளியிட்ட அறிக்கையில், தீர்ப்பில், இந்துக்கள் கோவில் கட்டிக் கொள்ள உரிமை உள்ளது என்பதை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனவே ராமர் பிறந்த இடத்தில் மிகப் பெரிய கோவிலை கட்டுவதற்கான மாபெரும் பணியின் முதல் தொடக்கத்திற்கு வழி ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் வலுப்படவும், இந்து முஸீலம் சமூகத்தவர் ஒருங்கிணைந்து செயல்படவும், தேசிய ஒருமைப்பாட்டில் புதிய அத்தியாயம் மலரவும் இந்த தீர்ப்பில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை மிகுந்த முதிர்ச்சியுடன் இந்தியமக்கள் வரவேற்றுள்ளனர். இதற்காக பாஜக நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார்.
கோயில் கட்ட உதவ வேண்டும்-முரளி மனோகர் ஜோஷி:
அயோத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனைத்துத் தரப்பினரும உதவ வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோதி கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கு அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு வழி செய்துள்ளது. கோயில் கட்டுவதற்கு அனைவரும் உதவ வேண்டும்.
மேலும் சர்ச்சைக்குரிய இடத்தில் பாபர் மசூதியும், சமாதி தோட்டமும் இருந்தது என்ற சன்னி முஸ்லிம் வக்ப் வாரியத்தின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
எனவே ராமர் கோயில் கட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ராமர் கோயில் கட்டுவதை தேசிய இயக்கமாக கருத வேண்டும். இதில் வேறுபாட்டுக்கு இடமில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications