தூத்துக்குடி அதிமுக ஆர்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்-வைகோ
மதுரை: தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி நுகர் பொருள் வாணிப கழகத்தில் தரக்கட்டுப்பாடு துணை ஆய்வாளராக பணியாற்றிய முருகன் அங்கு நடைபெற்ற ஊழலை, உணவு பொருள் கடத்தலை மேல் அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் புகார் செய்த காரணத்தினால் அவர் படு கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் முருகன் தற்கொலை செய்து கொண்டதாக சிலர் கூறி வருகின்றனர்.
அவர் பல உண்மைகளை வெளிக் கொண்டுவந்ததால் தான் கொலை செய்யப்பட்டார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. மேலும், அவரது உடலில் காயங்கள் உள்ளன.
எனவே இதில் உண்மை குற்றவாளிகளை கண்டு பிடித்து கூண்டில் ஏற்றி தண்டிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு அரசே ஏற்பாடு செய்ய வேண்டும் என நான் ஏற்கனவே கூறி உள்ளேன்.
உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி வருகிற 4 ம் தேதி அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடியில் நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. கட்சியும் கலந்து கொள்ளும்.
இந்த கண்ட ஆர்பாட்டத்தில், ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் நாசரேத்துரை, சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வக்கீல் ஜோயல், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம் உள்பட தொண்டர்கள் பலர் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications