அயோத்தி தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்யும் முன் ஆய்வு: முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம்
லக்னெள: அயோத்தி விவகாரத்தில் அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆய்வு செய்ய அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் 10 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு வரும் 9ம் தேதி கூடி விரிவான ஆய்வு மேற்கொள்கிறது.
இது குறித்து வாரிய உறுப்பினர் மெளலானா காலித் ரஷீத் பிர்னகி மாஹ்லி கூறுகையில்,
அயோத்தி தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு முன்பாக தீர்ப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்ய உள்ளோம்.
வாரிய உறுப்பினர்களில் பெரும்பாலானோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆய்வு செய்ய 10 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு வரும் 9ம் தேதி கூடி விரிவான ஆய்வு மேற்கொள்ளும்.
இதையடு்த்து வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள 51 உறுப்பினர்கள் கொண்ட செயற்குழுக் கூட்டம் கூடும். இதில் மேல் முறையீடு செய்வது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றார்.
தீர்ப்பு வேதனை அளிக்கிறது-கிலானி:
அயோத்தி தீர்ப்பு வேதனையளிப்பதாக காஷ்மீர் ஹுரியத் தலைவர் சையத் அலி ஷா கிலானி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், உலகில் எந்த ஒரு பகுதியிலும் மசூதியை இடிப்பது முஸ்லிம்களுக்கு கவலைதரக்கூடிய செயல் தான் என்றார்.
முஸ்லீம்களுக்கு ஏமாற்றம்-ராம் விலாஸ் பாஸ்வான்:
அயோத்தி தீர்ப்பு முஸ்லிம்களுக்கு ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், முஸ்லீம்கள் இதையே இறுதித் தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேணடியதில்லை. அதே போல பாஜக, ஆர்.எஸ்.எஸ், விஎச்பி, பஜ்ரங் தள் ஆகியவை இத்தீர்ப்பை வெற்றியாகக் கருதி கொண்டாடக் கூடாது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications