அயோத்தி தீர்ப்பில் முஸ்லீம்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
நெல்லை: அயோத்தி தீர்ப்பில் முஸ்லீம்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில் அது கிடைக்கும் என நம்புகிறோம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நெல்லை மாவட்ட தலைவர் யூசுப் அலி கூறும்போது, அயோத்தி தீர்ப்பில் முஸ்லீம்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. சட்ட ரீதியாகவும், அங்குள்ள ரீக்கார்டுகளின் அடிப்படையிலும் தீர்ப்பளிக்காமல் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை வைத்து இடம் பிரித்து கொடுக்க கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். மேல்முறையீடு செய்வதற்கு சன்னி வக்பு வாரியத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக எங்கள் அமைப்பு கடிதம் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக வரும் 17ம் தேதி சென்னையில் செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில் முடிவு எடுக்கப்படும். நாட்டில் அமைதி நிலவுவதற்கு தவ்ஹீத் ஜமாத் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றார்.
தமுமுக நெல்லை மாவட்ட செயலாளர் உஸ்மான்கான் கூறுகையில், அயோத்தி தீர்ப்பு முழுமையாக திருப்தி அளிக்கவில்லை. முஸ்லீம்களுக்கும் அதில் பங்கு உள்ளது என்று கூறியுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம்.
மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. உச்சநீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே அனைவரும் அமைதி காப்போம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications