இந்திய நகைகளை வாங்கணும், தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கனும்-வெளிநாட்டு வீரர்கள் ஆர்வம்
காமன்வெல்த் போட்டிக்காக டெல்லி வந்துள்ள வெளிநாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமல்லாமல் இந்திய வீரர், வீராங்கனைகளும் கூட ஊர் சுற்றிப் பார்க்கும் ஆர்வத்தில் உள்ளனராம்.
பிராக்டிஸ் நேரம் போக மற்ற நேரங்களில் தாஜ் மஹால் உள்ளிட்டவை குறித்த தகவல்களை அறிவதில்தான் நேரத்தைப் போக்குகின்றனராம். மேலும், எப்படிப்பட்ட நகைகள் இந்தியாவில் பிரபலமாக உள்ளன என்பது குறித்தும் லிஸ்ட் போட்டு வருகின்றனராம்.
மேலும் டெல்லியில் உள்ள முக்கிய இடங்களை சுற்றிப் பார்ப்பது குறித்தும் ஆர்வமாக பேசி வருகின்றனராம்.
அனைத்து வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளிடமும் உள்ளஒரே பொதுவான ஆர்வம் தாஜ் மஹால்தான். மேலும் ராஜஸ்தான் கோட்டைகளை சுற்றிப் பார்ப்பது உள்ளிட்டவையும் அவர்களின் பட்டியலில் உள்ளதாம்.
இதுகுறித்து குக் ஐலன்ட்ஸ் அணியின் நெட்பால் வீராங்கனை நியோலின் கூறுகையில், டெல்லி மார்க்கெட்களைப் பார்க்க நான் ஆர்வமாக உள்ளேன். தாஜ்மஹாலை கண்டிப்பாக பார்த்து விடுவேன் என்றார்.













Click it and Unblock the Notifications