பேண்ட் தொலைந்து போனதாக ஏற்பட்ட தகராறில் மாணவர் படுகொலை
காஞ்சிபுரம்: பேன்ட் திருடி விட்டதாக சந்தேகப்பட்டு தன்னுடன் சண்டை போட்ட மாணவரை, கொடூரமாகக் கொலை செய்த மாணவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
காஞ்சீபுரம் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் சாமிநாதன். எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்து வருகிறார். இவரது முதல் மனைவிக்குப் பிறந்தவர் லோகேஸ்வரன். 18 வயதான லோகேஸ்வரன் ஐடிஐயில் படித்து வந்தார். காஞ்சிபுரத்தில் விடுதியில் தங்கிப் படித்து வந்தார்.
நேற்றுகாலை லோகேஸ்வரன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணையில் குதித்தனர்.
இந்த விசாரணையில் லோகேஸ்வருடன் தங்கிப் படித்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நேந்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் சிக்கினார்.
முதலில் லோகேஸ்வரன் ஒருவரைக் காதலித்து வந்தார். அதில் ஏற்பட்ட பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறினார். ஆனால் போலீஸார் நம்பவில்லை. தொடர்ந்து அவரு துருவித் துருவி விசாரித்தபோது, அதுஉண்மை இல்லை என்று தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் தான்தான் லோகேஸ்வரனைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார் புருஷோத்தமன்.
இதுகுறித்து புருஷோத்தமன் கொடுத்த வாக்குமூலத்தில்,
நானும், லோகேஸ்வரனும் விடுதியில் ஒரே அறையில் தங்கி இருந்தோம். நேற்று முன்தினம் இரவு லோகேஸ்வரனின் பேண்ட் ஒன்று மாயமாகி இருந்தது. இதுபற்றி அவர் என்னிடம் விசாரித்தார். பேண்ட்டை நான் திருடியதாக சந்தேகப்பட்டு தகராறு செய்தார்.
இதனால் எங்களிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் லோகேஸ்வன் தூங்கி விட்டார். அவர் மீது ஆத்திரத்தில் இருந்த நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அங்கிருந்த கல்லை எடுத்து லோகேஸ்வரன் முகத்தில் ஓங்கி குத்தினேன். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார் என்று கூறினார் புருஷோத்தமன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications