காமன்வெல்த் போட்டி-டெல்லியை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு
டெல்லி: டெல்லியில் வலம் வந்த பிச்சைக்காரர்கள் யாரையும் அங்கு காணவில்லை. அனைவரையும் கட்டாயப்படுத்தி நகரிலிருந்து வெளியேற்றியுள்ளதாக டெல்லி அரசு மீது மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
டெல்லி சாலைகள், வணிக வளாகங்களை வலம் வரும் பிச்சைக்காரர்கள், பலூன் விற்போர், பத்திரிக்கை விற்போர், பேனா, மலிவு விலைப் பொருட்களை விற்போர் என யாரையுமே பார்க்க முடியவில்லை. அனைவரும் மாயமாகியுள்ளனர்.
பிச்சைக்காரர்கள், சிறு பொருள் வியாபாரிகள் என யாருமே இல்லாமல் காணப்படுகிறது டெல்லி. அனைவரும் எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இவர்களை டெல்லி அரசுதான் கட்டாயப்படுத்தி வெளியேற்றி விட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை டெல்லியை விட்டு வெளியேற்றியுள்ள மாநில அரசு, காமன்வெல்த் போட்டிகள் முடியும்வரை டெல்லி பக்கமே வரக் கூடாது என எச்சரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து இந்தோ குளோபல் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி என்ற அமைப்பின் இந்து பிரகாஷ் சிங் கூறுகையில், எங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை ரயில்களில் ஏற்றி வெளி மாநிலங்களுக்கு மாநில அரசு அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. மேலும், போட்டிகள் முடியும் வரை டெல்லிக்கு வரக் கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏழைகள் மீது கிட்டத்தட்ட பயங்கரவாதத்தை பிரயோகித்துள்ளது டெல்லி காங்கிரஸ் அரசு. இது மிகவும் கொடுமையான, மனிதநேயமற்ற செயல் என்று அவர் கூறினார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications