தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை: திருநாவுக்கரசர்
ராமநாதபுரம்: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர்கள் தேவை என்ற விருப்பம் ஒவ்வொரு தொண்டனுக்கும் உள்ளது. அவர்களின் விருப்பத்தில் எந்த தவறும் இல்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் வழியில் நானும் இதை வலியுறுத்துவேன் என்று முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் 9ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில், எனது 35 வருட அரசியலில் பக்கபலமாக இருந்த ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைப்பு விழா நடைபெறுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரும் தங்கள் கட்சியின் சார்பில் அமைச்சர்கள் வர வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளனர். அவர்களின் விருப்பத்தில் எந்த தவறும் இல்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் வழியில் நானும் இதை வலியுறுத்துவேன்.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு பின் பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால், ராமநாதபுரம் லோக்சபா தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல முடியாமல் போனது. எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் இந்த குறை நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
ஏற்கனவே, தமிழக ஆட்சியில் பங்கு வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கேஎஸ். இளங்கோவன் திமுகவை எரிச்சல்படுத்தி வந்தார். இந் நிலையில் தற்போது புதிதாக காங்கிரசில் சேர்ந்துள்ள திருநாவுக்கரசாரும் இதே கோரிக்கையை முன் வைத்து திமுகவுக்கு அதிர்ச்சி தந்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications