விரைவில் சீனாவை 'ஓரங்கட்டிவிடும்' இந்தியா! - தி எகானமிஸ்ட்

தற்போது வெளியாகியுள்ள எகானமிஸ்ட் இதழில் 'How India's growth will outpace China's' என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியாகியுள்ளது. அதில் பொருளாதார அதிசயங்கள் புரியும் சக்தியாக இந்தியா எப்படி மாறியது என்று அலசப்பட்டுள்ளது.
இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டுமானால் கேள்விக் குறியாக இருக்கலாம், ஆனால் அங்குள்ள தனியார் நிறுவனங்கள் மிகவும் வலுவானவை என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "எத்தனை சவால்கள் வந்தாலும் அதுபற்றி பெரிதாக இந்தியா அலட்டிக் கொள்வதில்லை. உதாரணத்துக்கு, சமீபத்திய காமன்வெல்த் போட்டிகள் பற்றி எத்தனையோ மோசமான செய்திகள் வந்தன. ஆனால் இறுதியில் அவற்றைப் பொய்யாக்கி, சர்வதேசத் தரத்தில் சற்றும் குறைவில்லாமல் போட்டிகளை நடத்துகிறது.. அதுதான் இந்தியாவின் ஸ்பெஷல்.
இந்த ஆண்டு நிச்சயம் 8.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டும். இதற்கு இந்தியாவின் மக்களாட்சி முறையும் கூட பெருமளவு உதவும்" என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவை விட சீனா பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் 2013-ல் சீனாவை விட பெரிய, வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழும், என்கிறது அக்கட்டுரை.
குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டத்தில் தீவிரமாக உள்ள சீனாவில், உழைக்கும் மக்கள் தொகை விரைவிலேயே ஓய்வு பெறும் வயதை அடைந்துவிடும் என்றும், அதே நேரம், இந்தியாவின் உழைக்கும் வர்க்கம் அதன் உச்சகட்ட வீரியத்தில் இருக்கும் என்றும் இக்கட்டுரை ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது.
சாப்ட்வேர் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு சீனாவை விட இந்தியாதான் பெட்டர் சாய்ஸ் என்று கூறியுள்ளது எகானமிஸ்ட்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications