பூரியில் பணத்தைப் பங்கிடுவதில் பூசாரிகளுக்குள் அடிதடி-ஒருவருக்கு மூக்கு உடைந்தது
பூரி: உலகப் புகழ் பெற்ற பூரி ஜெகன்னாதர் கோவில் பூசாரிகளுக்கிடையே பணத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் குபுகுபுவென கொட்டியது.
ஜெகன்னாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பூசாரிகளுக்கு நன்கொடை அளிப்பார்கள். இதை பூசாரிகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வது வழக்கம். நேற்றும் அதேபோ பங்கு பிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.
திடீரென ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். கோவில் கருவறைக்கு அருகே வைத்து பூசாரிகள் அடித்துக் கொண்டதைப் பார்த்து பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மோதலில் ஒரு பூசாரியின் மூக்கு உடைந்து ரத்தம் குபுகுபுவென கொட்டியது. அது சாமி சிலை மீதும் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தரிசனம் நிறுத்தப்பட்டது.
அடித்துக் கொண்ட பூசாரிகளை அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் சிலைகளுக்கு பரிகார பூஜை நடத்தப்பட்டு தரிசனம் தொடர்ந்து நடந்தது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்பு பூசாரிகள் பணத்திற்காக இவ்வாறு அடித்துக் கொண்டு சாமிசிலை மீது ரத்தம் சிந்தும் அளவுக்கு நடந்து கொண்டது பக்தர்களை பெரும் வருத்தத்திலும், அதிர்ச்சியிலும் மூழ்க வைத்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications