Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனை குறித்த கருணாநிதியின் புகார் மலிவானது-சிஐடியூ

Subscribe to Oneindia Tamil

மதுரை: சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆளும் திமுக-வினரின் வன்முறை வெறியாட்டமே காரணம் என்று சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் கூறியுள்ளார்.

இது குறித்து சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் வெளியிட்டுள்ள அறிக்கை..

தமிழக முதல்வர் 5 ம் தேதி விடுத்துள்ள அறிக்கையில் 4 ம் தேதி சென்னையில் நடந்த போக்குவரத்து வேலை நிறுத்தத்திற்கு சிஐடியு சங்கம் தான் பொறுப்பு என்று கூறியுள்ளார்.

காயம் அடைந்த ஒருவர் இறந்துவிட்டார் என்ற வதந்தியை சிஐடியுதான் பரப்பியது என்றும், அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு மாறானது.

இந்த ஒட்டுமொத்த சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும். அவரது மலிவான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்.

4 ம் தேதி அண்ணா நகர் பணிமனையில் சுமார் 11.30 மணியளவில் இந்த வேலைநிறுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த இடத்தில் சிஐடியு சங்கத்தின் தலைவராகிய நானும் இருந்தேன். தொ.மு.ச.தலைவர், செ.குப்புசாமி திமுக கவுன்சிலர் மகனின் செயல் கொஞ்சம்கூட நியாயமற்றது என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

முதல்வரின் அறிக்கையில் சிஐடியூவைச் சேர்ந்த சிலர் காயம்பட்டிருந்த மூன்று தொழிலாளர்களை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து அழைத்துச் சென்று சென்னை பொது மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள் என்பது மட்டும்தான் உண்மை.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு போலீசார் மூலம் கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களில் மூன்று பேரின் நிலை மோசமாக இருப்பதால் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டாக்டர்கள் அவர்களை பொது மருத்துவமனைக்கு தாங்களாகவே மாற்றினார்கள். மருத்துவமனைச் சீட்டில் அந்த விபரம் எழுதப்பட்டுள்ளது.

உடன் இருந்து அவர்களுக்கு உதவி செய்து பொது மருத்துவமனைக்கு சிஐடியு தோழர்கள் கொண்டு வந்தனர். இது எங்களின் தொழிற்சங்கக் கடமை. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அவர்களை அனுமதிக்கக்கூடாது என்று உயர்மட்டத்தைச் சார்ந்த யாரோ சிலர் நிர்ப்பந்தமும் கொடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

திமுக பிரமுகரின் பிள்ளையை போலீஸ் நடவடிக்கையில் இருந்து காப்பாற்றும் முயற்சியாக இது இருக்கலாம். கடுமையான காயம்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க வழி வகை செய்தோம். இதில் என்ன குற்றம் இருக்கிறது?. இது குற்றம் என்றால் சிஐடியூ அதற்காக வருத்தப்படவில்லை.

அந்தத் தொழிலாளர்கள் 6 ம் தேதி வரை சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். மேலும் 10 நாட்களாவது அவர்கள் ஓய்வெடுக்க வேண்டும்.

3 ம் தேதி இரவே சம்பவம் நடந்தது. புகாரும் அன்று இரவு 10 மணி வாக்கில் தரப்பட்டுவிட்டது. ஆனால் போலீஸ் நடவடிக்கை என்பது காலையில் வேலை நிறுத்தம் தொடங்கிய பிறகு தான் துவங்கியது என்பதை முதல்வர் அறிய வேண்டும்.

முதல்வர் பெருமை பாராட்டிக் கொள்ளக்கூடிய கொலை முயற்சி வழக்கு போடப்பட்டது என்பது வேலை நிறுத்தத்திற்குப் பிறகு தான் என்பதையும் அவர் அறிய வேண்டும்.

திமுகவைச் சேர்ந்த வன்முறை கும்பலுக்கும், தொழிலாளர்களுக்கும் கை கலப்பு ஏற்பட்டதாக முதல்வர் கூறியிருப்பதும் உண்மையல்ல. உருட்டுக் கட்டை, இரும்புக்கம்பி போன்றவற்றால் கண்மூடித்தனமாக தொழிலாளர்கள் தான் தாக்கப்பட்டுள்ளனர். பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. எனவே திமுக கட்சியைச் சார்ந்த ஒரு தரப்பினர் தான் தொழிலாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர் என்பதே உண்மை.

அன்றாடம் தாக்குதலுக்கு ஆளாகும் தொழிலாளர்கள் தேங்கிக்கிடக்கும் ஆவேசத்தோடும், உள்ளக் குமுறலோடும் பாதுகாப்புக் கேட்டும், நடவடிக்கை கேட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

முக்கால்வாசி போக்குவரத்து ஊழியர்கள் தொ.மு.ச. உறுப்பினர்களே என்று கூறிக்கொள்ளப்படுகிறது. அவர் கள் உட்பட அத்தனை பேரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பொது மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு ஆளும் கட்சியின் வன்முறை வெறியாட்டமே காரணம்.

தொழிலாளர்களின் நியாயமான வேண்டுகோளை 3 ம் தேதி இரவே நிறைவேற்றியிருக்க முடியும். அதில் அக்கறையே காட்டாமல் தவறு செய்தவர்கள் காவல்துறை, நிர்வாகமும் தான் காரணம்.

வேலை நிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர பொறுப்போடு செயல்பட்ட அமைப்புதான் சிஐடியூ. என்று கூறியுள்ளார் செளந்தரராஜன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+