ஷீலா தீட்சித்துக்கு எதிரான நியூசி. டிவியின் இனவாத விமர்சனம்-மத்திய அரசு கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நியூசிலாந்து நாட்டு டிவி தொகுப்பாளர் ஒருவர், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக தெரிவித்துள்ள கருத்துக்கள் இனவாத கருத்தாகும். இதை இந்திய அரசு வன்மையாக கண்டிக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கண்டித்துள்ளார்.

காமன்வெல்த் போட்டியை வைத்து இந்தியாவை படு கேவலமாக விமர்சித்து வருகின்றன சில வெளிநாடுகளின் மீடியாக்களும், அதன் தூதர்களும். ஆனால் அவர்களது அத்தனை விமர்சனங்களையும் தூள் தூளாக்கும் வகையில் காமன்வெல்த் போட்டிகள் மிக நேர்த்தியாகவும், பிரச்சினை இன்றியும் நடந்து வருகின்றன. கேம்ஸ் வில்லேஜை அத்தனை பேரும் தற்போது வாய் விட்டுப் பாராட்டி வருகின்றனர்.

இதுபோன்ற கேம்ஸ் வில்லேஜை நான் பார்த்ததே இல்லை என்று காமன்வெல்த் விளையாட்டு அமைப்பின் தலைவர் பென்னலும் பாராட்டியுள்ளார்.

இந்த நிலையில், நியூசிலாந்து நாட்டு டிவி ஒன்றின் தொகுப்பாளர் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று விளக்குவதாக கூறிக் கொண்டு இனவாதமாக பேசியுள்ளார். அத்தோடு நில்லாமல், இந்தியர்கள் குறித்தும் அவதூறாகப் பேசினார் அந்த இனவெறியர். இதையடுத்து அந்த நபரை அந்த டிவி நிறுவனம் வேலையைவிட்டுத் தூக்கியுள்ளது.

ஷீலா தீட்சித்தை கேலி செய்வதற்கு முன்பு, நியூசிலாந்து நாட்டு கவர்னர் ஜெனலர் ஆனந்த் சத்யானந்த்தையும் அவர் கிண்டலடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

டிவி தொகுப்பாளரின் இந்தப் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில், இதுகுறித்து நேரில் வந்து விளக்கமளிக்குமாறு நியூசிலாந்து தூதருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வருக்கு எதிரான பேச்சு பச்சையான இனவாதமாகும். இதை ஏற்கவே முடியாது என்றார்.

இந்த சர்ச்சை குறித்து சம்பந்தப்பட்ட டிவியான டிவிஎன்இசட் விடுத்துள்ள அறிக்கையில், தொகுப்பாளர் பால் ஹென்றியின் பேச்சு அடங்கிய வீடியோவை எங்களது இணையதளத்திலிருந்து அகற்றி விட்டோம். அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளது.

இந் நிலையில் நியூசிலாந்து தூதர் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு வந்து தனது வருதத்தத்தைத் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.

இந்தியர்கள்னா இவர்களுக்கெலாம் ரொம்பத்தான் இளக்காரமாகி விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+