For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2011-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: 2011-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் மாலதி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பாணை:

ஆங்கில புத்தாண்டு (ஜனவரி 1, சனிக்கிழமை),
தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் (ஜன.15 சனி),
திருவள்ளுவர் தினம் (ஜன.16, ஞாயிறு),
உழவர் திருநாள் (ஜன.17, திங்கள்),
குடியரசு தினம் (ஜன.26, புதன்கிழமை),
மீலாது நபி (பிப்.16, புதன்),
ஆண்டு வங்கிக்கணக்கு முடிக்கும் நாள் (ஏப்ரல் 1, வெள்ளி),
தெலுங்கு வருடபிறப்பு (ஏப்.4, திங்கள்),
அம்பேத்கர் பிறந்தநாள் (ஏப்.14 வியாழன்),
மகாவீர் ஜெயந்தி (ஏப்.16, சனி),
புனிதவெள்ளி (ஏப்.22, வெள்ளி)
மேதினம் (மே 1, ஞாயிறு);

சுதந்திர தினம் (ஆக.15, திங்கள்),
கிருஷ்ண ஜெயந்தி (ஆக.21, ஞாயிறு),
ரம்ஜான் (ஆக.31, புதன்),
விநாயகர் சதுர்த்தி (செப்.1, வியாழன்),
வங்கிகளில் அரையாண்டு கணக்கு முடிக்கும் நாள் (செப்.30, வெள்ளி);

காந்தி ஜெயந்தி (அக்.2, ஞாயிறு),
ஆயுத பூஜை (அக்.5, புதன்),
விஜயதசமி (அக்.6, வியாழன்),
தீபாவளி (அக்.26, தீபாவளி புதன்),
பக்ரீத் (நவ.7, திங்கள்), முகர்ரம் (டிச.6, செவ்வாய்) மற்றும் கிறிஸ்துமஸ் (டிச.25, ஞாயிறு).

ஆக, இந்த ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

-இவ்வாறு அந்த அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் மேற்கண்ட 24 நாட்களில், 8 நாட்கள், சனி, ஞாயிறு ஆகிய வழக்கமான விடுமுறை நாட்களில் வருகின்றன. எனவே 16 நாட்கள்தான் உண்மையில் விடுமுறை தினங்களாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X