காமன்வெல்த் போட்டி பாதுகாப்புப் பணியிலிருந்த 20 போலீஸார் திடீர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காமன்வெல்த் போட்டி நடைபெறும் பல்வேறு மைதானங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 20 போலீஸார் திறமையின்மை மற்றும் ஒழுங்கீனம் ஆகிய புகார்களின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சில போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தங்களது பணியில் கவனம் செலுத்தாதது, திறம்பட செயலாற்றத் தவறியது, சோம்பேறித்தனம், ஒழுங்கீனம் ஆகிய புகார்களின் பேரில் இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 8 பேர் கேம்ஸ் வில்லேஜில் பணியில் இருந்தவர்கள். 3 பேர் பிற இடங்களிலும், 7 பேர் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டிருந்தவர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications