தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி விட்டன-குரேஷி
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பூர்வாங்க ஆயத்தப் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லியிலிருந்து சென்னை வந்தார் குரேஷி. அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கு கால அவகாசம் அதிகமாக உள்ளது. ஆனாலும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை நாங்கள் தொடங்கிவிட்டோம்.
மேலவை தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு இருக்கும் எதிர்ப்பு குறித்து தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்தோம். இதில் பெரும்பாலான கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவில் திருப்பதியாக உள்ளதாக தெரிவித்தனர். ஒரு சில கட்சிகள் வாக்குப்பதிவின் போது சரியாக ஓட்டு பதிவானதா என்பதை அறிய ரசீது வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளன.
இது தொடர்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திர பராமரிப்பு தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை தரும். அந்த அறிக்கை கிடைத்த பின் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
சமீபகாலமாக தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம், அச்சுறுத்தல் அதிகமாக நடப்பது கவலை அளிக்கிறது. இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பீகாரில் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக கூறப்படுகிறது.
இதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை கையாண்டு வருகிறோம். பீகாரில் அனைத்துக் கட்சி குழு, தொண்டு நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள் ஒருங்கிணைந்து இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்திலும் புகார்கள் வருவதால் இங்கும் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications