பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், பலூசிஸ்தான் தலைவர் நவாப் அக்பர் பக்தி, முஷாரப் தலைக்கு விலை வைத்
இஸ்லாமாபாத்: முஷாரப் ஆட்சிக்காலத்தில் கொடூரமான முறையில் பலுசிஸ்தான் தேசியத் தலைவர் நவாப் அக்பர் பக்தி கொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில், முஷாரப்பின் தலைக்கு விலை வைத்துள்ளார் பக்தியின் மகன்.
முஷாரப்பின் தலையைக் கொண்டு வரவோருக்கு ரூ.1 கோடி பணமும், 1000 ஏக்கர் நிலமும் தரப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
முஷாரப் ஆட்சிக் காலத்தில், பலுசிஸ்தான் தேசியத் தலைவர் பக்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்கு முஷாரப்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் தற்போது முஷாரப்பின் தலைக்கு விலை வைத்துள்ளார் பக்தியின் மகன் தலால் அக்பர் பக்தி. இவர் ஜமூரி வதான் கட்சியின் தலைவராக இருக்கிறார்.
குவெட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் பக்தி பேசுகையில், எனது தந்தை படுகொலை செய்யப்படக் காரணம் முஷாரப்தான். அதேபோல 1999ம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை புரட்சி செய்து கவிழ்த்தவரும் அவர். எனவே அவர் அரசியல் சட்டத்தின் 6வது பிரிவின்படி மரண தண்டனைக்குத் தகுதியானவர்.
அந்த அடிப்படையில், அவர் தலையைக் கொண்டு வந்து சமர்ப்பிப்போருக்கு ரூ. 1 கோடி பணமும், 1000 ஏக்கர் நிலத்தையும் தருகிறேன் என்றார் பக்தி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications