அதிமுகவின் இதயம் கொங்கு மண்டலம்-வைகை செல்வன் பேச்சு
திருப்பூர்: கொங்கு மண்டலம் தான் அ.தி.மு.க.-வின் இதயம் என்று அ.தி.மு.க. மாநில இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. இலக்கிய அணி கலந்தாய்வு கூட்டம் குமார் நகர் கருப்பராய சுவாமி கோவில் மண்டபத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் மாநில இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது,
அ.தி.மு.க. என்ற ஜனநாயக கதவு வழியாக சாமானியனும் கூட நுழைந்து புகழ்பெற முடியும். அதே வேகத்தில் கட்சியை அணையா விளக்காக காக்க வேண்டும். அவ்வாறு செயல்படும் போது தான் வெற்றி நம்மை வந்தடையும். வேண்டுமானால் வெற்றியைத் தள்ளிபோடலாமே தவிர தவிர்க்க முடியாது.
ஒவ்வொரு தேர்தலிலும் கிடைக்கும் வெற்றியை வேட்பாளரின் தனிப்பட்ட வெற்றியாகக் கருதாமல், நம்முடைய கட்சியின் வெற்றியாக நினைத்து நாம் செயல்பட வேண்டும். இலக்கிய அணி நிர்வாகிகள் விழாக்களில் பொன்னாடை போர்த்துவதை தவிர்த்து, புத்தகங்களை வழங்க வேண்டும்.
கொங்கு மண்டலம் என்றாலே அ.தி.மு.க.-விற்கு இனிப்புதான். காரணம் இனிப்பான செய்திகளைத் தருவது கொங்கு மண்டலம் தான். குறிப்பிட்டு சொல்லப் போனால் அதிமுகவின் இதயமே கொங்கு மண்டலம் தான் என்று கூறலாம் என்றார் வைகைச் செல்வன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications