பிரபாகரன் இருக்கிறாரா என்பது குறித்து காலம் பதில் சொல்லும்-'பிரதமர்' ருத்திரகுமாரன்

பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு அவர் அளித்துள்ள பேட்டி:
''நாடு கடந்த தமிழ் ஈழ அரசை சட்ட விரோத அரசாக இலங்கை அறிவித்து இருக்கிறதே?''
''ஸ்ரீலங்கா அரசின் பயத்தையே இது வெளிப்படுத்துகிறது. ஸ்ரீலங்கா அரசின் சட்டங்கள், தமிழர்களின் சம்மதமும் பங்களிப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டவை. தமிழர்கள் அவற்றை சட்டங்களாக என்றுமே ஏற்கவில்லை.
நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் அவர்களின் சட்டங்களுக்கு முரணாக இருப்பதாகச் சொல்வதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எமது அரசாங்கம் அனைத்து நாடுகளின் சட்டங்களுக்கும், குறிப்பாக அனைத்துலக மனித உரிமை சட்டங்களுக்கும் பொருந்துவதாகவே அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சட்டங்களை ஓர் ஆயுதமாக ஏந்திய வண்ணம், தமிழ் ஈழ மக்களுக்கான சுதந்திரத் தமிழ் ஈழ அரசினை அமைப்பதற்காக எமது அரசாங்கம் அயராது உழைக்கும்!''
''நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, இன்று இலங்கை அரசுக்கு ஆதரவாகிவிட்ட கே.பி-யின் சிந்தனையில்தான் முதலில் உருவெடுத்ததாகப் பரபரப்பு கிளம்பி வருகிறதே?''
''மே மாதம் 19-ம் தேதிக்குப் பின்னர் தோற்றம் பெற்ற புதிய சூழலில், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்த நகர்வுகளை முன்னெடுப்பதற்கு தாயகத்திலும் புலத்திலும் உள்ள அரசியலாளர்கள், அறிஞர்கள் ஒன்றுகூடி விவாதித்தே இந்த 'அரசாங்கம்' என்ற அரசியல் அமைப்பை உருவாக்குவது என்ற முடிவுக்கு வந்தோம். இதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக உறவுகள் பொறுப்பாளர் என்ற பொறுப்பு நிலையில் இருந்து, கே.பி. களம் அமைத்துத் தந்தார்.
அதே வேளை, இந்த அமைப்பு உருவாக்கப்படும் முறையிலும், செயற்படும் முறையிலும் சுயாதீனமாகவே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அவர் ஏற்றுக்கொண்டார். அந்த அடிப்படையில், இதை உருவாக்கும் முயற்சிக்குத் தலைமை தாங்க, நான் உடன்பட்டேன். மலேசியாவில் கே.பி. கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்கா அரசிடம் கையளிக்கப்பட்ட பின்னர், நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் தொடர்பாக அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
எமது அரசாங்கம் வெளிப்படையாக... தனது அமர்வுகளில் மக்களும் அவதானிப்பாளர்களாகப் பங்கு பெறக்கூடிய வகையில் தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மக்களால் நேரடியாக வாக்களித்துத் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் முடிவுக்கு ஏற்பவே இது தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது!''
''கே.பி-க்கு மிக நெருக்கமானவராக உங்களைச் சொல்கிறார்கள். சிங்கள அரசின் கைப்பாவையாக மாறி அவர் பரப்பும் கருத்துகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''நான் போராட்டத்துக்குத்தான் நெருக்கமானவன். உண்மையில் கே.பி. அனைத்துலக உறவுகள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர், மிகக் குறுகிய காலமே அவருடன் எனக்குத் தொடர்பு இருந்தது. அவருடன் மட்டுமல்ல... அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் காஸ்ட்ரோ ஆகியோருடன் இதே காலப் பகுதியில் தொடர்புகள் இருந்தன.
மக்கள் மீது சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த இனப் படுகொலையை, எவ்வாறு தடுத்து நிறுத்தலாம் என்பதே இந்தத் தொடர்புகளுக்குக் காரணமாக இருந்தன.
சிங்களத்தின் பிடியில் உள்ள கே.பி-யால் சுதந்திரமாக இயங்க முடியாது. ஸ்ரீலங்காவின் சிறைகளுக்குள் இருக்கும் எவராலும் தமிழ்த் தேசியத்துக்குப் பங்காற்ற முடியாது!''
''நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமராக எப்போது தமிழகத்துக்கு வரப்போகிறீர்கள்?''
''அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சக்தி தமிழக மக்களுக்கு உண்டு என்றே நான் கருதுகிறேன்!''
''விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் - இந்நாள் தலைவர்கள், நாடு கடந்த தமிழ் ஈழ அரசை ஆதரித்து உங்களிடம் பேசினார்களா?''
''தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை... நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் ஊடாக அடுத்த கட்டம் நோக்கி முன்னெடுக்க விரும்பும் அனைவரும் எங்களின் முயற்சியை ஆதரிக்கிறார்கள். உங்கள் கேள்வியின் நோக்கத்தை இந்த வார்த்தைகள் பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன்!''
''புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா...?''
''எதிர்காலம் இதற்கு பதில் சொல்லும்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications