திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கிக்கு வந்த ரூ.1.25 லட்சம் கள்ள நோட்டு
திருவனந்தபுரம்: மூன்று மாதத்தில் ஒன்றே கால் லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கியின் திருவனந்தபுரம் மண்டல அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இவ்வளவு கள்ள நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு எவ்வாறு வந்தது என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
விரிவான விசாரணைக்காக இவ்வழக்கை மாநில குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றி விடவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் செயல்படும் வங்கிக் கிளைகளில் இருந்துதான் கள்ள நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போலீசுக்கு தெரிவித்துள்ளனர்.
இதில் 100, 500, 1000 என 251 கள்ள நோட்டுகள் உள்ளன. இந்த கள்ள நோட்டுகள் அனைத்தும் திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையம் மூலமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த கள்ள நோட்டுகள் கடந்த ஏப்ரல் மாதம் 5-ம் தேதி முதல் ஜூன் மாதம் 29-ம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் தான் ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளது. எந்தெந்த வங்கிக் கிளைகளில் இருந்து எவ்வளவு கள்ள நோட்டுகள் எந்தெந்த தேதிகளில் வந்துள்ளது என்பது குறித்தும் அதிகாரிகள் போலீசுக்கு தெரிவித்துள்ளனர்.
வங்கியில் கள்ள நோட்டா, நல்ல நோட்டா என்பதை அறிவதற்கான கருவிகள் உள்ள நிலையில் எவ்வாறு கள்ள நோட்டுகள் பெறப்பட்டன என்பது புரியாத புதிராக உள்ளது. இது குறித்து போலீ்சார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications