தமிழனத்திற்கு மத்திய அரசின் துரோகத்தால் தெற்கிலும் காஷ்மீர் உருவாகும்-வைகோ
கோவை: மத்திய அரசு தமிழினத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருவதன் மூலம் தெற்கிலும் ஒரு காஷ்மீரை உருவாக்கி வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய அரசு அழைத்தது.
இதனை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் முன்பு கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது,
இலங்கையில் ஈழத் தமிழர்களை ஈவு இறக்கம் இன்றி கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்சே. அவருக்கு 71 நாடுகள் பங்கேற்றுள்ள காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவில் மகுடம் சூட்ட மத்திய அரசு முடிவு எடுத்துவிட்டது.
ஆஸ்திரேலியாவில் 10 இந்தியர்கள் தாக்கப்பட்டபோது, இந்தியா கண்டனம் தெரிவித்தது. அதற்கு ஆஸ்திரேலியா தூதரகமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.
மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பலர் கொல்லப்பட்டபோது, பாக்கிஸ்தானுடன் போருக்குத் தயார் என மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். ஆனால் தமிழகத்திலுள்ள மீனவர்களை தினமும் கொன்று குவிக்கும் சிங்கள அரசை மத்திய அரசு கண்டிக்காதது ஏன்?
இலங்கை அதிபர் படுகொலை பாதகன் ராஜபக்சேவைக் கவுரப்படுத்த இந்திய அரசு துடிப்பது ஏன்? தமிழினத்துக்கு இதை விட மிகப்பெரிய துரோகத்தை எந்த அரசும் செய்ய முடியாது. இந்த துரோகத்துக்கு கருணாநிதியும் துணை போயிருக்கிறார்.
மத்திய அரசு தமிழினத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருவதன் மூலம் தெற்கிலும் ஒரு காஷ்மீரை உருவாக்கி வருகிறது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications